தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இதுவரை மூன்று மாதத்திற்கான தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறும் பயனாளிகளுக்காக ஊட்டியில் மலையரசி தொடர் வைப்பு திட்டம் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் பெறப்படும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை மகளிர் சேமித்துக் கொள்ளலாம். மேலும் 1 முதல் 5 ஆண்டுகால சேமிப்புக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்றும் சிறிய தொகையை சேமிக்க விருப்பம் உள்ள பெண்கள் அரசு வழங்கும் இந்த தொகையை மலையரசி தொடர் வைப்பு திட்டத்தின் கீழ் செலுத்தி பயன்பெறுவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.