
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவின் காரணமாக நேற்று இரவு 10.02 மணி அளவில் காலமானார். தாயாரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சென்னையில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக திருச்சிக்கு விமானத்தில் வந்தார். அதன் பிறகு சாலை மார்க்கமாக பன்னீர்செல்வம் திருச்சியில் இருந்து பெரிய குளத்திற்கு சென்றார். அங்கு இறந்த தன் தாயின் உடலை பார்த்து ஓ. பன்னீர்செல்வம் காலை பிடித்து கதறி அழுதார்.
இதைப் பார்த்து அனைவரும் கலக்கண்கலங்கினர். இந்நிலையில் பழனியம்மாளின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதன் பிறகு முக்கிய பிரபலங்கள் பலரும் நேரில் வந்து பழனியம்மாவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள் . இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அரசியல் கட்சி பிரபலங்கள் பலரும் இடங்கள் தெரிவித்து வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இதுவரை யாருமே இரங்கல் தெரிவிக்கவில்லை.
அதுமட்டுமின்றி இபிஎஸ் தரப்பிலிருந்து ஒரு இரங்கல் அறிக்கை கூட வெளிவரவில்லை. சில மாதங்களுக்கு முன்பாக ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டிற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தாய் ஸ்தானத்திலிருந்து பழனியம்மாள் விபூதி பூசி ஆசி வழங்கினார். ஆனால் அப்படிப்பட்ட ஒருவரின் மறைவுக்கு எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இரங்கல் தெரிவிக்காமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இன்று மாலை 4.30 மணி அளவில் பழனியம்மாளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. மேலும் பழனியம்மாவின் உடல் பெரியகுளம் நகராட்சிக்கு சொந்தமான பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.