
கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சனாதனத்தில் இருப்பது தீட்டு கொள்கை.. தீட்டு கொள்கை என்பது எஸ்சி மக்களுக்கு மட்டும் தான் தீட்டு கொள்கை இருக்கின்றது என்று நிறைய பேர் நினைச்சிட்டு இருக்கிறாங்க, அது தப்பு. எந்த ஜாதியும்… சாதிகுள்ள சாதிதான் திருமணம் பண்ணிக்க முடியும். வேறு சாதியில் திருமணம் பண்ண முடியாது. அதுவே தீட்டு தான்.
முதலியார் வன்னியரை கல்யாணம் பண்ணிக்க முடியாது. வன்னியர் போய் நாயுடுவை கல்யாணம் பண்ண முடியாது. நாயுடு போய் நாயக்கரை கல்யாணம் பண்ணிக்க முடியாது. நாயக்கர் போய் செட்டியாரை கல்யாணம் பண்ண முடியாது. செட்டியார் போய் பிள்ளைமாரை கல்யாணம் பண்ண முடியாது. பிள்ளைமார் முக்குலத்தோரை கல்யாணம் பண்ண முடியாது. முக்குலத்தோர் போய் நாடாரை கல்யாணம் பண்ண முடியாது.
ஒரே ஜாதிக்குள்ள தான் கல்யாணம் பண்ணிக்கணும் என்று தான் இந்தியா முழுவதும் இருக்கு இந்த ஜாதிக்கும் சாதி திருமணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்கின்ற நிலை இருக்கிறதே, அகமண முறை, உலகத்தில் எந்த மதத்திலும் கிடையாது. பார்பனர்களுக்குள்ளே தீட்டு இருக்கிறது. நம்பூதிரி வீட்டுக்குள்ள ஐயர் போக முடியாது.
நம்பூதிரி வீட்டு பெண்ணை ஐயரோ, ஐயங்காரோ போய்கல்யாணம் பண்ண முடியாது. இந்த திக்குள்ளே தான் குலம், கோத்திரம் பார்த்து தான் கல்யாணம் பண்ண முடியும். தமிழ்நாட்டிற்குள்ளே சவுண்டி பார்ப்பான் வேற… சமையல் பார்ப்பான் வேற… கோவிலில் பூஜை செய்ற பார்ப்பான் வேற….
சவுண்டி பார்ப்பான் என்கிறவன் ஈமச்சடங்கு செய்கிற பார்ப்பனன். பூஜை செய்கிற பார்ப்பனர் மணி அடிக்கிற பார்ப்பனர். சமையல் செய்கின்ற பார்ப்பனர் வேற பார்ப்பனர். மேல் ஜாதி பார்ப்பனர் வேற சவுண்டி பாப்பனும், சமையல்காரன் பாப்பான் ஒன்னும் கிடையாது. சமம் கிடையாது. சமத்துவம் கிடையாது. சமத்துவமின்மை என பேசினார்.