எனக்கு எடப்பாடி துரோகம் செஞ்ச மாதிரியே பாஜகவுக்கும் துரோகம் செஞ்சுட்டாரு என்ற OPS விமர்சனம் பற்றிய  கேள்விக்கு பதிலளித்த விகே. சசிகலா,

என்னை பொருத்தவரை ஒரு இயக்கம் அப்படிங்கும் போது… அரசியல் நிலவரத்தை நாம பார்க்கணும். இவருடைய கட்சியினுடைய தலைவர்கள் எப்படி இருந்தாங்க ?  அப்படிங்கறது சிந்தித்து பார்க்கணும் என்பது என்னோட கருத்து. அது மட்டும் இல்ல,  தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்வதற்கு எது சரியான தருணம் ? அப்படிங்கறது எல்லாம் பார்த்து செயல்படணுங்குறது தான் என்னுடைய கருத்து.

ஓபிஎஸ்-க்கு பாஜக தேசிய தலைமையில் இருந்து போன்கால் வருவது போல உங்களுக்கும் போன்கால் வருகின்றதா ? என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, இங்க தான் இருக்க போறீங்க. அதனால எது இருந்தாலும் உங்களுக்கு பிரீஸ் நியூஸ் சொல்லாமல் நான் செய்ய மாட்டேன். எந்த நேரம் கால் வருமோ,  அந்த நேரம் வரும்.

நீங்க, ஓபிஎஸ், டிடிவி எல்லாம் சேர்ந்து ஒரு கூட்டணிக்குள்ள போக வாய்ப்பு இருக்கா என்ற கேள்விக்கு பதிலளித்த சசிகலா, என்னை பொருத்தவரைக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை முதல்ல ஒருங்கிணைக்க வேண்டும். அந்த வேலையில் தான் நான் ஈடுபட்டு இருக்கேன். 2024க்குள்ள அதிமுகவை ஒன்றிணைப்பேன் என இப்பயும் நான் அதைத்தான் சொல்கின்றேன்.

இன்னும் 6 மாசம் இருக்கு. அரசியல்ல இன்னைக்கு நடக்கிறது நாளைக்கு வேற மாதிரி நடக்கலாம். இன்னைக்கு அந்த கூட்டணி பெருசா தெரியலாம். நாளைக்கு எப்படி வேணும்னாலும்  மாறலாம்,  அதெல்லாம் நம்ம கையில இல்லை என தெரிவித்தார்.