வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. 15 நிமிடத்தில் 4.5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது. இதனால் கோரிப்பாளையம், தல்லாகுளம், சிம்மக்கல், தமுக்கம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்ததால் மழைநீர் சூழ்ந்துள்ளது.

வி.பெருமாள் பட்டி, பண்ணப்பட்டி, கொங்கபட்டி ஆகிய பகுதிகளில் மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர். இதற்கிடையில் மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் விரைந்து சீரமைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.