திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் உறவினர் வீட்டில் ராஜ்மோகன் என்பவர் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்த ராஜ்மோகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ராஜ்மோகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.