சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மண்டபம் ரோடு பகுதியில் அப்பு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். அப்பு பகுதி நேரமாக வாடகை காரும் ஓட்டி வந்துள்ளார். நேற்று காலை அப்பு காய்கறிகள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி சாலை அருகே சென்றபோது மின்னல் வேகத்தில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையின் மீது ஏறி முன்னால் சென்ற அப்புவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அப்பு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்புவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.