திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம்,

தலைவர் கலைஞர் அவர்களிடமிருந்து நம்முடைய முதலமைச்சர் அண்ணன் தளபதி அவர்கள் வரை தொடர்ந்து,  தமிழ்நாட்டிற்கு நீட் தேவையில்லை. நீட் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கக்கூடிய  ஒன்றாக இருக்கின்றது, அதை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

அந்தப் போராட்டத்தின் ஒரு நீச்சியாக… இளைஞர் அணியின் சார்பிலே உதயநிதி அவர்களால் உண்ணாவிரத போராட்டம் என்பது மாணவர் அணியோடு, மருத்துவர் அணியோடு இணைந்து தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டம் ஒரு மாணவர்களின் போராட்டமாக…

மக்கள் எழுச்சி போராட்டமாக மாற வேண்டும் என்று தான் நாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிற கருத்து. இந்த நீட் தேர்வுகள் நாம் வேண்டாம் என்று சொல்லுவதற்கு காரணம்…  கொஞ்சம் நாம் சரித்திரத்தின் பக்கங்களை திருப்பி பார்க்க வேண்டும்.

ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் ? சமஸ்கிருதம் தெரிந்தால் தான் மருத்துவம் படிக்கலாம்.  சமஸ்கிருதம் தெரியலன்னா… மருத்துவம் படிக்க முடியாது,  கேட்கலாம் எதுக்கு சமஸ்கிருதத்துக்கும், மருத்துவத்துக்கும் சமஸ்கிருதம்.  லத்தீன் படி, கீரீக் படி என்றால் ? அதுலயாவது பெயர் இருக்கும். அதை புரிஞ்சிக்கிறதுக்கு வசதியா இருக்கும், நாம் புரிந்து கொள்ள முடியும்.  ஆனால் சமஸ்கிருதம் படித்தால்  தான் மருத்துவக் கல்லூரியில் இடம் என்று இருந்த நிலையை மாற்றியது திராவிட இயக்க ஆட்சி என தெரிவித்தார்.