தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வரும் எண் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, 1967 தேர்தலில் இருந்து எல்லாம் உங்க அன்பில்,  பல பேருக்கு –  பல வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க. நான் உங்களிடம் பாரதிய ஜனதாவின் கட்சியினுடைய மாநில தலைவராக கேட்பது ஒன்றே ஒன்றே ஒன்றுதான்.

உங்களுக்கு அன்பை மட்டுமே விதைக்கக்கூடிய பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு இந்த முறை அன்பை நாம் கொடுப்போம். 2024 பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அளப்பரிய அன்பை நீங்கள் காட்ட வேண்டும். எதை பத்தியும் யோசிக்காதீங்க…  உங்களுடைய நலனை பாரதிய ஜனதா கட்சி பார்த்துக் கொள்ள வேண்டியது எங்களுடைய பொறுப்பு.

இல்லாட்டி வேர்க்க விறுவிறுக்க…    எதுக்கு இங்க நடக்கணும் ? 1300 கிலோமீட்டர் எதுக்கு நடக்கணும் ? ஜனவரி 11ஆம் தேதி இந்த யாத்திரை முடியும்போது 1300 கிலோ மீட்டருக்கு மேல இந்த யாத்திரை நடந்திருப்போம். எதுக்கு நடக்குறோம்னா…? எங்களை நாங்கள் வருத்திக் கொண்டு உங்களுக்கு நாங்கள் சொல்கிறோம்…

நீங்க இன்னும் ஓட்டு போடல,  நீங்கள் ஓட்டு போடுவதற்கு முன்னாலேயே…  எங்களை வருத்திக்க ஆரம்பிச்சுட்டோம். நீங்க ஓட்டு போட்டா நாங்க யாரும் வீட்ல உட்கார போறதில்லை என்ற செய்தியை சொல்ல வேண்டும் என்பதற்காக தான் என் மண்,  என் மக்கள் யாத்திரை நடைபயணமாக தமிழகத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்காக வருத்துகிறோம் என தெரிவித்தார்.