தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் நோக்கி தனியார் பேருந்து பெங்களூரில் இருந்து வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தை இன்னாசி என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில் 24 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காக்காதோப்பு பிரிவு அருகே சென்ற பொது எதிரே வந்த அரசு பேருந்து திடீரென நான்கு வழிச்சாலையில் இருந்து சர்வீஸ் ரோட்டிற்கு செல்வதற்காக திரும்பியது. இதனால் ஆம்னி பேருந்தின் டிரைவர் சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்திற்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் இன்னாசி உள்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து விபத்தில் சிக்கிய ஆம்னி பேருந்து கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.