லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தில் உள்ள ‘தி பியர்ரோட்’ அடுக்குமாடி குடியிருப்புகளின் வாகன நிறுத்துமிடத்தில் 20 அடி நீளமுள்ள அரிய வகை ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குப்பைத் தொட்டிக்குள் இருந்த இந்த மலைப்பாம்பை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக விலங்கு கட்டுப்பாடு மற்றும் LAPD-க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் விரைவாகச் செல்ல முடியாத நிலையில், பிரபல ஊர்வன கையாளுபவர் ஜோசப் ஹார்ட் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டார். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், வெறும் கைகளால் பாம்பை பிடித்து கட்டுப்படுத்தும் துணிச்சலான செயலால் ஹார்ட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்த ஹார்ட், குப்பைத் தொட்டியிலிருந்து பாம்பை எச்சரிக்கையுடன் வெளியே எடுத்து, தலையைப் பிடித்து கட்டுப்படுத்தும் காட்சிகள் தென்படுகின்றன. “பாம்பு பயந்த நிலையில் இருந்தது. அதைச் சுற்றி பலர் கூடியதால் மன அழுத்தத்திற்கு ஆளானது” என்று ஹார்ட் தெரிவித்தார். இந்த பாம்புக்கு அவர் ‘ஆப்பிள்ஸ்’ என்று பெயரிட்டதுடன், சிறிய பிளாஸ்டிக் கொள்கலனில் அடைத்து குப்பைத் தொட்டியில் விட்டு சென்றது விலங்கு கொடுமை எனவும் கண்டனம் தெரிவித்தார்.
View this post on Instagram
“>
தற்போது ‘ஆப்பிள்ஸ்’ ரிவர்சைடில் சிகிச்சை பெற்று வருகிறாள். சில மாதங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் சிறப்பு பராமரிப்பு வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு உலகின் மிக நீளமான பாம்பு இனங்களில் ஒன்றாகும்; தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்த இனம் அதன் அற்புதமான நீளம் மற்றும் வலிமைக்காக உலகப் புகழ் பெற்றது
