
மராட்டிய மாநிலத்தில் உள்ள புனேவில் குழந்தை இல்லாத மருமகளை கணவர் மற்றும் மாமியார் மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியை சாப்பிடுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர். இது குறித்து மருமகள் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பெண்ணின் மாமியார் மற்றும் கணவர் உட்பட 7 பேரின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் மந்திரவாதியின் ஒருவர் பேச்சைக் கேட்டு மருமகளை ஒரு நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்று அகோரி பயிற்சியில் ஈடுபடுமாறு வற்புறுத்தியதோடு மனித எலும்புகளில் இருந்து செய்யப்பட்ட பொடியையும் சாப்பிடுமாறு வற்புறுத்தி உள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட குடும்பம் நன்கு படித்த குடும்பமாக இருக்கும் நிலையிலும் எதற்காக இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளை ஈடுபட்டார்கள் என்பது தெரியவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.