கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிட தயாராகி வரும் நிலையில், இக்கட்சி காங்கிரஸ் மற்றும் பாஜக உள்ளிட்ட பெரும் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தான் தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சிவானந்தா பாட்டீஸ் (54) என்பவர் சிந்தகி தொகுதியில் சட்டசபை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவர் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட நிலையில் நேற்று இரவு திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் எச்.டி குமாரசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சட்டசபை வேட்பாளருக்கு திருமணமாகி ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில், அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.