இந்தியாவில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் மட்டும் 8.3 சதவீதம் அளவுக்கு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது. இது நவம்பர் மாதத்தில் 8% இருந்த நிலையில் டிசம்பரில் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நகர்புற வேலையின்மை விகிதம் டிசம்பரில் 8.96 சதவீதத்திலிருந்து, 10.09 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதன் பிறகு கிராமப்புறங்களில் வேலையின்மை விகிதம் 7.55 சதவீதத்திலிருந்து 7.44 சதவீதமாக சரிந்துள்ளது. மேலும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான தொடர் முயற்சிகளை எடுத்து வருவதால் வேலையின்மை பிரச்சனைகள் கூடிய விரைவில் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.