விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
”சாமி கும்பிட போயி…. உடல் பருமனால் சிக்கிய இளைஞர்” இடுக்கு பிள்ளையார் கோயிலில் பரிதாபம்…. மூச்சு திணறி உயிரிழப்பு….!!
ஆன்மீகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று இடுக்கு பிள்ளையார் கோயில். இக்கோயிலில் உள்ள குறுகலான இடுக்கு வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கையாக இருந்து வருகிறது.…
Read moreBreaking: பூமி பூஜை… அதிமுக எம்எல்ஏ அக்ரிகிருஷ்ணமூர்த்தி வேஷ்டியில் திடீரென பற்றிய தீ… அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்.. பரபரப்பு வீடியோ…!!!
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிய குளங்கள் அமைக்கும் வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கும் வகையில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்பணியை அப்பகுதி சட்டமன்ற உறுப்பினரான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி,…
Read more