இந்தியாவில் கார், பைக், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒரே நேரத்தில் ஓலா, ஊபர், ரேபிடோ ஆகிய நிறுவனங்களுக்கு கீழ் வாகனம் ஓட்டுவதை பார்த்திருப்போம். இந்த வரிசையில் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அவருடைய ஆட்டோவுக்கு 3 வெவ்வேறு பதிவு எண்களை வைத்துள்ளார்.

அதில் ஒரு நம்பர் பிளேட் ஓலா நிறுவனத்திற்கு, மற்றொரு நம்பர் பிளேட் ஊபர் நிறுவனத்துக்கு, மற்றொன்று ரேபிடோவுக்கு மஞ்சள் நிற நம்பர் பிளேட் வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாக பரவும் நிலையில் யார் இந்த ஆட்டோ ஓட்டுநர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த ஆட்டோவில் இருக்கும் 3 நம்பர் பிளேட் குறித்த விவாதம் இணையத்தில் சூடு பிடித்துள்ளது.