ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (அ) EPF என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிறுவப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் ஒரு பிரபல சேமிப்பு அமைப்பு ஆகும். ஊழியர்கள், முதலாளிகள் இரண்டு பேரும் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12 சதவீதத்தை EPF-க்கு பங்களிக்கின்றனர்.

EPF-ல் பெறப்படும் வட்டிக்கு வரியில்லை மற்றும் அபராதம் இல்லாமல் திரும்ப பெறலாம். பணியாளர்கள் ஓய்வு பெற்றதும் மொத்த தொகையை பெறுவார்கள். அதில் திரட்டப்பட்ட வட்டியும் அடங்கும். ஓய்வுக்கு பின் இத்தொகையை பெற பணியாளர்கள் வேலை மாறும்போது தங்களின் EPF கணக்கு சரியான நேரத்தில் மாற்றப்பட்டதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.

அப்படி செய்யவில்லையெனில் பழைய EPF கணக்கு தொடர்ந்து EPF வட்டி விகிதத்தினை பெறும். எனினும் கணக்கில் பங்களிப்பு இல்லாததால் EPF கணக்கில் சம்பாதித்த வட்டிக்கு வரிவிதிக்கப்படும். இவை PF பங்களிப்பின் தொடர்ச்சியையும் பாதிக்கும். இது கடைசியாக EPF கணக்கு வைத்திருப்போரின் ஓய்வூதிய பலனை பாதிக்கும் என கூறப்படுகிறது.