முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான ரோஹித் ஷர்மா (Rohit Sharma), தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக நவம்பர் 27 அன்று ராஞ்சிக்கு (Ranchi) வந்து சேர்ந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கானப் பாதுகாப்பு பலமாக இருந்தபோது, ​​அவரை வரவேற்க வந்த இந்தியக் கிரிக்கெட் வீரர் ஷபாஸ் நதீமை (Shahbaz Nadeem) பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அடையாளம் காணத் திணறினர்.

பாதுகாப்பு அதிகாரிகள் நதீமை அடையாளம் கண்டுகொள்ளாதபோது, ரோஹித் ஷர்மா சிரித்துக்கொண்டே குறுக்கிட்டு, “அட, இவர் நம்ம நண்பர் (Dost) தான், இவர் தான் நம்மைக் கவனித்துக் கொள்கிறார்” என்று கலகலப்பாக இந்தியில் பதிலளித்துள்ளார்.

இந்த வேடிக்கையான உரையாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சர்வதேச அளவில் உச்சத்தில் இருந்தாலும், சக வீரர்கள் மற்றும் உள்நாட்டு வீரர்களுடன் ரோஹித் ஷர்மா கொண்டிருக்கும் எளிமையானப் பிணைப்பை இது காட்டுவதாக ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.