உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள பபினா கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. செப்டம்பர் 25, மாலை 5 மணியளவில், ஒரு பெண் குறுகலான பாதையில் நடந்து சென்றபோது, தெரு காளை ஒன்று அவரை தாக்கியது.

பெரிய கருப்பு காளை அந்தப் பெண்ணை பல அடி உயரத்துக்கு தூக்கி எறிந்தது. இதில் அவர் தரையில் விழுந்து கடுமையான காயங்களுடன் உடனடியாக மயங்கி விழுந்தார். இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

17 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பெண் ஒருவர் பாதையில் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. காளையை பார்த்தவுடன் அவர் தனது கையை உயர்த்தி முன்னேற முயன்றார்.

ஆனால், ஆத்திரமடைந்த காளை அவரை துரத்தி, பல அடி உயரத்துக்கு தூக்கி எறிந்தது. விழுந்த அந்தப் பெண் அசைவற்று கிடந்தார். காளை அவருக்கு அருகிலேயே நின்று மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிர்ஷ்டவசமாக, அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் காளையை விரட்டி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தார்.