திருநெல்வேலி மாவட்டத்தில் டவுன் சாலியர் தெருவில் மினிக்குடி பகுதியில் வசித்து வந்தவர் மாதவன் (55). இவருக்கு விமலா என்ற மனைவி உள்ளார். மாதவன்- விமலா தம்பதியினருக்கு ஒரே மகன் கிருஷ்ணர் சங்கர் (22). மாதவன் துபாயில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கிருஷ்ண சங்கர் சென்னையில் சி.ஏ படித்து வந்துள்ளார். இந்த நிலையில் கிருஷ்ண சங்கர் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவதற்காக தனது நண்பர்களுடன் துபாய்க்கு சென்றுள்ளார். அங்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை செலவிடுவதற்காக தனது தந்தை தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு அடுக்குமாடி குடியிருப்பு என்பதால் மிகப்பெரிய நீச்சல் குளம் ஒன்றுள்ளது. அந்த நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த கிருஷ்ணர் சங்கர் திடீரென நீச்சல் தெரியாமல் ஆழமான பகுதிக்கு சென்றதால் மூழ்கியுள்ளார். தனது மகன் நீரில் மூழ்குவதை கவனித்த மாதவனும் வேகமாக நீரில் இறங்கியுள்ளார். இதனை அடுத்து மாதவனும் தனது மகனுடன் ஆழமான பகுதியில் மூழ்கினார். இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இதனை அடுத்து இருவரின் உடலும் துபாயிலிருந்து நேற்று காலை 6.30 மணி அளவில் அவர்களது சொந்த ஊரான திருநெல்வேலிக்கு கொண்டுவரப்பட்டது.

கணவர் மற்றும் மகன் இருவரின் உடல்களையும் பார்த்து விமலா கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதன் பின் இறுதி சடங்கு நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் கணவர் மற்றும் மகன் இருவருமே இறந்த சோகம் தாங்க முடியாமல் விமலா தற்கொலை முயற்சி செய்து கொள்வதற்காக தனது கையை அறுத்துக் கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே விமலாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு விமலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவன், மகன் இறந்ததால் தாய் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.