இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது அந்த வீடியோவில் ஒரு வீட்டில் மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து செல்கின்றது. அந்த வீட்டின் உள்ள சோபா ஒன்றில் அந்த பாம்பு மெதுவாக செல்கிறது. அதன் உடம்பில் ஒரு பெண் குழந்தை ஒன்று ஏறி, கட்டிப்பிடித்து விளையாடுகிறது. இதனை அவரது தந்தை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்கிறார்.

 

அப்போது அவரது தந்தை ஒரு சத்தம் கொடுக்க அதற்கு அந்த பெண் குழந்தை அழகாக சிரிக்கிறது. அனகோண்டா பாம்பை விட பார்ப்பதற்கு பெரிதாக இருக்கிறது. இது அநேகமாக மலைப்பாம்பாக இருக்கக்கூடும். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களையும், கண்டங்களையும் தெரிவித்து வருகின்றனர்.