ஐதராபாத்தில் உள்ள நாராயண்குடா பகுதியில், முகமது வாசிம் என்ற காய்கறி விற்பனையாளர் ஒருவர் சுகாதாரமற்ற முறையில் காய்கறிகளைக் கையாளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர்மீதுக் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அவர் முதலில் தன்னுடைய அந்தரங்கப் பகுதியைத் தொட்டுவிட்டு, பிறகு அதே கைகளால் காய்கறிகளைப் பார்ப்பதுப் பதிவாகி உள்ளது.

இந்தப் பொதுச் சுகாதாரக் குறைபாட்டை உள்ளூர்வாசிகள் வீடியோ எடுத்துப் பகிர்ந்ததை அடுத்து, போலீஸார் உடனடியாக விசாரணை நடத்தி, விற்பனையாளர் வாசிமை கைது செய்தனர்.

அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவருக்கு 5 நாட்கள் சிறைத் தண்டனையும், ₹2,500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அவரது காய்கறிக் கடையும் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.

பொதுச் சுகாதாரத்துக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் மீண்டும் உறுதி அளித்துள்ளனர்.