தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மிகப் பெரிய திருப்பமாக, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவில் இணைந்துள்ளார்.

இது அதிமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக அதிமுக-வின் பவர் சென்டராகவும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசியாகவும் அறியப்பட்ட ஓபிஎஸ், தனது சட்டைப்பையில் எப்போதும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆனால், திமுகவில் இணைந்த கையோடு, அந்தப் புகைப்படத்தை அகற்றிவிட்டு, முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அவர் அறிவாலயம் வந்த காட்சி, தமிழக அரசியல் களத்தை அதிர வைத்துள்ளது.

“அம்மா கொள்கை காக்கவே இந்த முடிவு” என்று அவர் கூறி வந்தாலும், சட்டைப்பையில் இருக்கும் புகைப்பட மாற்றம், அதிமுக-வில் அவர் கொண்டிருந்த விசுவாசத்தின் முடிவாகவே பார்க்கப்படுகிறது.