என் மண் என் மக்கள் யாத்திரையில் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, நீங்கள் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியோடு இருக்க வேண்டும். உங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் கையில் எடுத்துக் கொண்டு சரி செய்து கொண்டு இருக்கின்றோம். மாநில அரசு வேலை செய்யாத போது கூட நம்முடைய மத்திய அரசு அதனுடைய எல்லையே தாண்டி வேலை செய்கின்றார். 2024 ல மக்கள் பிரதிநிதி நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவருடைய கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று சொல்லி நேரம் ரொம்ப அதிகமாகிட்டு இருக்கு. பெண்கள் இருக்கிறாங்க வீட்டிற்கு போகணும்…

குழந்தைகள் இருக்கிறாங்க,  வீட்டுக்கு போன்னும்…. நேரம் ரொம்ப அதிகமாயிட்டு….   நிச்சயமாக சூலூரிலே ஒரு 6 மணி,  7 மணிக்கு ஒரு பொதுக்கூட்டத்தை போட்டு நாம் பேசுவோம். நம்ம தலைவர்கள் எல்லாம் பேசுகிறோம். எல்லாருடைய நேரத்தையும் எனக்கே கொடுத்துடாங்க….  பெண்கள் பத்திரமாக வீட்டுக்கு செல்ல வேண்டும். காவல்துறை இருக்கிறாங்க பத்திரமாக பணி செய்வாங்க என்றாலும் கூட நேரத்தை நாம் காலம் தாழ்த்த கூடாது. அதனால் இந்த அற்புதமான யாத்திரைக்கு தமிழகத்தினுடைய 82- வது தொகுதிக்கு இந்த யாத்திரைக்கு வந்து இருக்கிறது.

அற்புதமான எழுச்சி மிகுந்த வரவேற்பை நீங்கள் அளித்திருக்கின்றிகள். உங்களுக்கு அனைவரின் சார்பாக இந்த நேரத்திலே நன்றி கலந்த வாழ்த்துகளை வணங்களை தெரிவித்து… எங்களுடைய மாவட்டத்தினுடைய தலைவி ஆற்றல் மிகுந்த ஒரு அற்புதமான சகோதரி… கடுமையான கள பணியாளர்.. இன்னைக்கு நான்கு மணியில் இருந்து ரோட்டியிலே இருக்கிறார்கள். அதனால் தான் கொஞ்சம் அக்காவுக்கு மயக்கம் வந்துருச்சி… நல்லா இருக்கிறார்கள்.

ஓ ! அக்கா வந்துடாங்க… ரொம்ப சந்தோஷம்….  நம்முடைய தலைவி சங்கீதா அக்கா நூறு ஆயுசு. பெயரை சொன்னவுடன் மேடைக்கு வந்து இருக்கிறார். சிரிக்கிறத பாத்து எங்களுக்கு சந்தோஷமாக இருக்கு. நல்லா குணமாகி வந்து இருக்கிறாங்க. நம்முடைய பேராசிரியர் கனகசபாபதி அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை வணக்கங்களைத் தெரிவித்து… மாநில விவசாயி அணியின் உடைய தலைவர்…

கொங்கு பகுதியில விவசாய பிரச்சினைக்கு முதல் ஆளாக குரல் கொடுக்க கூடிய ஒரு நல்ல அரசியல்வாதி… இதே பகுதியில கடுமையான களப்பணி செய்யக்கூடிய அண்ணன் ஜி.கே நாகராஜ் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்களை வணக்கங்களை தெரிவித்து… எங்களுடைய மாநிலத்தினுடைய பொது செயலாளர் பெருங்கோட்ட பொருப்பாளர்… மிகுந்த சிரமத்திற்கு இடையே இந்த யாத்திரை நடத்திக் கொண்டு இருக்கின்றார் என தெரிவித்தார்.