தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கலில் பென்னாகரம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் ஒகேனக்கல் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுச்சாமி, மீன்வளத்துறை பணியாளர்கள் ஆகியோர் மீன் கடைகளில் திடீரென ஆய்வு நடத்தியுள்ளனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஐந்து கடைகளில் அழுகிய நிலையில் இருந்த மீன்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனால் 195 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அந்த மீன்கள் குழி தோண்டி நிலத்தில் புதைக்கப்பட்டது. மேலும் அழகிய நிலையில் இருக்கும் மீன்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்