நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் கார்பைடு கற்கள், தடை செய்யப்பட்ட வேதியியல் பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கிறார்களா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5 பழக்கடைகளில் அழுகிய நிலையில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் இருந்தது தெரியவந்தது.

இதனால் அழுகிய நிலையில் இருந்த பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் கூறியதாவது, அழுகிய பழங்களால் தயாரிக்கப்பட்ட பழச்சாறு குடிக்கும் போது ஒவ்வாமை, அஜீரணக் கோளாறு ஏற்படும். எனவே வேதி பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைக்க கூடாது. சேர்க்கையாக மாம்பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான  நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.