கடலூர் மாவட்டத்தில் உள்ள மேல குப்பத்தில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார் நேற்று முன்தினம் கலைமணி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

இந்நிலையில் கலைமணி செல்போனில் பேசிய படியும், செல்போனை பார்த்த படியும் பேருந்தை இயக்கியதாக கூறப்படுகிறது. அதனை சில பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்து போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில் போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி கலைமணியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.