கோவையில் ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் 12, 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களின் பெற்றோரை குறிவைத்துப் பேசி, ஸ்காலர்ஷிப் பணம் பெற்றுத்தருவதாக 77 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், 500 பேர் வரை ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், அரசின் லோகோவை பயன்படுத்தி பெற்றோருக்கு நம்பிக்கை அளித்து, QR கோடு அனுப்பி அதனை ஸ்கேன் செய்யச்சொல்லி வங்கி, ஏடிஎம் கார்டு விபரங்களை பதிவு செய்யக்கூறி பணத்திருட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.