விஜய்யிடம் பரிசு வாங்கிய மாணவி ஒருவர், அவரை அரசியலுக்கு வருமாறு மேடையில் வைத்தே அழைப்பு விடுத்து அரங்கத்தை அதிர வைத்தார். மாணவ -மாணவிகளுக்கு விஜய் விருது வழங்கும் விழா காலை தொடங்கி தற்போது வரை நடந்து வருகிறது. அப்படி, விருது வாங்கிய மாணவி ஒருவர், விஜய் சினிமாவை போல அரசியலுக்கும் வந்து சாதிக்க வேண்டுமென அழைப்பு விடுக்க, விஜய் அதை கவனமுடன் கேட்டுக்கொண்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது