நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிவராஜ், நந்தகுமார் ஆகியோர் ஊட்டியில் உள்ள எட்டினஸ் ரோடு, அரசு மருத்துவமனை அமைந்துள்ள சாலையில் இருக்கும் பேக்கரி, ஹோட்டல், தேனீர் விடுதிகளில் ஆய்வு செய்துள்ளனர்.

அப்போது ஒரு ஹோட்டலில் காலாவதியான பரோட்டா மற்றும் சப்பாத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து 5 தேநீர் கடைகளில் பயன்படுத்திய 3 1/2 கிலோ சாயம் கலந்த டீத்தூள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். மேற்கூறிய 6 கடைகளுக்கும் தலா 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.