ஒடிசாவில் அடுத்தடுத்து ரயில்கள் மோதியதில் ஏற்பட்ட கோர விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தை ஆய்வு செய்தார். அதன் பிறகு விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசியதாவது, ரயில் விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள். விபத்தில் இறந்தவர்களை மீண்டும் கொண்டுவர முடியாது. இந்த விபத்து அரசுக்கு மிகவும் சீரியஸ் ஆனது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து ஒவ்வொரு வகையிலும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார் ‌