கோரமண்டல் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து 21 ரயில் பெட்டிகள் அகற்றப்பட்டுவிட்டன. இரவு பகலாக நடைபெற்றுவரும் மீட்புப் பணிகளை துரித கதியில் நடத்த ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி இன்னும் சரக்கு ரயிலில் 2 பெட்டிகளும், என்ஜினும் மட்டுமே அகற்றப்பட இருக்கிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப் பட்டிருக்கிறார்கள். பலர் வீடு திரும்பிவிட்டனர்.

இந்நிலையில், நாளை ஹவுராவிலிருந்து பெங்களூரு செல்லும் விஸ்வேஸ்ரயா விரைவு ரயில் (12863) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை ஹவுராவிலிருந்து சென்னை வரும் சென்னை சென்ட்ரல் மெயில் ரயில் (12839) ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நாளை திப்ரூகார்க் – கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவு ரயில் (22504) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.