தமிழகத்தில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து அவர் தொடக்க கூட்டுறவு சங்கத்தில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் செயல்பாட்டில் இல்லாத சங்கங்களின் நிலை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். துணைப் பதிவாளர்கள் மாவட்டங்களில் பால் உற்பத்திக்கு வாய்ப்புள்ள பகுதிகளை கண்டறிந்து பால் வரத்தை அதிகப்படுத்த வேண்டும்.

சங்கங்களில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை கால தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களுக்கு உதவும் விதமாக கால்நடை பராமரிப்பு விவரங்கள் மற்றும் நோய் பாதுகாப்பு விவரங்களை சுவரொட்டிகள் மூலமாக காட்சிப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.