கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பாண்டியன்குப்பம் தெற்கு தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பவானி(19) என்ற மகள் உள்ளார். இவர் நாமக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பவானி நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

இதனால் பெரியசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து பெரியசாமி சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பவானியை தீவிரமாக தேடி வருகின்றனர்.