சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கி வருகிறது. தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் சென்னையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மெட்ரோ ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் செல்கிறார்கள். தினந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் ஸ்மார்ட் டிக்கெட் அட்டையை வாங்கி பயன்படுத்துவார்கள். இதனால் அவர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் எப்போதாவது மெட்ரோ ரயிலில் செல்பவர்கள் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுக்க வேண்டும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக தற்போது மெட்ரோ ரயில்வே நிர்வாகம் whatsapp மூலமாக டிக்கெட் எடுக்கும்  முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு செல்போன் நம்பர் கொடுக்கும். இந்த நம்பருக்கு வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் அனுப்ப வேண்டும். அதன் பிறகு சாட் பார்ட் என்ற மெசேஜ் நம் வாட்ஸ் அப்புக்கு வரும். அதில் டிக்கெட் எடுப்பது தொடர்பான விபரங்கள் இடம் பெற்று இருக்கும். மேலும் இதை பூர்த்தி செய்தால் உங்களுடைய டிக்கெட் ஈசியாக கிடைத்துவிடும்.