
செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், 13 கோடி மக்கள் இருக்கின்ற பீகார் மாநிலத்தில் 45 நாட்களிலே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்தாங்க. இது ஜாதி வாரிய கணக்கெடுப்பு எண்ணிக்கை மட்டும் கிடையாது. ஒவ்வொரு சமுதாயமும்….. ஒவ்வொரு ஜாதியும் எந்த நிலையில் இருக்கின்றார்கள். சமூக பின்தங்கிய நிலை…. சோசியல் பேக்வேடுனஸ்… பொருளாதார நிலை…. கல்வி நிலை… சுகாதார நிலை…. வேலை வாய்ப்பு நிலை… வீடு இருக்கிறதா ? தண்ணீர் வருகிறதா ?
இப்படி எல்லாம் கிட்டத்தட்ட 19, 20 வகையான குறியீடுகளை எடுப்பது தான் ஜாதி வாரிய கணக்கெடுப்பு. இதை எடுத்து எந்தெந்த சமுதாயம் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என தெரிந்து, அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம், குறைக்கலாம்… கூட்டலாம், உள் ஒதுக்கீடு செய்யலாம், எல்லாம் செய்யலாம்அதான் உண்மையான சமூக நிதி.
மாநில சுயாட்சி பேசுகின்ற தி.மு.க அரசு, இங்கே மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தும். இல்ல.. இல்ல… எங்களுக்கு இந்த அதிகாரம் வேண்டாம். மத்திய அரசு தான் செய்யணும்னு சொல்வதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் முதலமைச்சர் அவர்கள் ஜாதி வாரிய கணக்கெடுப்பு அறிவியுங்க, அப்புறம் பாருங்க. அதிகாரம் இருக்கா ? இல்லையா ? என தெரிஞ்சுக்கலாம். அறிவிப்பதில் என்ன பிரச்சனை உங்களுக்கு ?
எல்லாம் மாநிலமும் அறிவிக்குது… அப்போ என்ன காரணம் ? ஏன் அறிவிக்காமல் இருக்கிறீங்க ? அதனால் கலைஞர் அரசு அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்க… கலைஞர் அவர்கள் இருந்திருந்தாருன்னா நிச்சயமாக அறிவிச்சி இருப்பாரு, எனக்கு நம்பிக்கை இருக்கு. அப்போ இருக்கின்ற ஒரு சூழல். அதனால் முதலமைச்சர் அவர்கள் நிச்சயமாக அறிவியுங்க. அறிவித்து, இங்கு சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என இந்த நேரத்தில் கேட்கிறேன் என தெரிவித்தார்.