சென்னை பெருங்குடியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்,  தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இன்றைய தினம் அண்ணா திமுக தலைமை கேட்டுக் கொண்டதற்கு இணங்க…. அவர்களால் முடிந்த உதவியை எங்கெங்கெல்லாம் சென்னை மாநகரம்,  சென்னை புறநகர் பகுதிகளில்  மக்கள் வெள்ளத்தால் பாதித்தார்களோ…

அந்த பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறார்கள். அதற்கு நன்றியை தெரிவிப்பதோடு,  இன்னும் இந்த தண்ணி வடிகின்ற வரை கழக நிர்வாகிகளும்,  தொண்டர்களும் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அன்பு வேண்டுகோள்  வைக்கிறேன். இன்றைக்கு பார்த்தீர்களா டான்சி நகர்… வேளச்சேரியில் மொட்டை மாடியில இன்னைக்கும் இருந்துகிட்டு இருக்காங்க…. கிட்டத்தட்ட பஸ்ட் பிளோர் புல்லா  தண்ணீர் நிரம்பிட்டு…..

எல்லாம் உங்க தொலைக்காட்சியில் பார்த்தது தான்… அதற்க்கு இன்னும் நடவடிக்கை எடுக்கல….  அங்கு இருக்கின்ற மாணவி விடுதிகள்ல மாணவிகள் எல்லாம் கிட்டத்தட்ட னென்றில்  இருந்தே  சாப்பாடே கிடைக்கலைன்னு இன்னைக்கு வெளியேறுகின்ற காட்சி எல்லாம் தொலைக்காட்சியில் பார்த்தேன்… மேற்கு மாம்பழத்தில் சுமார் 5000 வீடுகள் தண்ணீர் சூழ்ந்து….

அது ஒரு முதல் மாடியே நிரம்பி இருக்கின்றது… அங்கெ எல்லாம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை… விடியா திமுக அரசு, வேகமாக… துரிதமாக நடவடிக்கை எடுக்கணும். முடிச்சூர், வரதராஜபுரம்,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் எல்லா பக்கமுமே வெள்ளம் சூழ்ந்து இருக்கிறது…  அங்கேயும் வெள்ளத்தை அப்புறப்படுத்துவதற்கு இந்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

அதோடு நம்முடைய சோழியங்கநல்லூர் தொகுதியில…. கல்லுக்குட்டை,  கே பி கே நகர் 2 பகுதிகளுமே தண்ணீரால் மக்களை பாதிக்கப்பட்டுளர்கள்….. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்….  அங்கேயும் உடனுக்குடன் இந்த அரசு செயல்பட்டு மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும்.

வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் காந்திநகர்,  சேக்குத்துல்லா  நகர், இந்திரா நகர் போன்ற பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாமல் இருக்கின்றது.  இனியாவது இந்த அரசாங்கம் அந்த தண்ணியை இறைப்பதற்கு உண்டான இயந்திரத்தை பொருத்தி,  விரைவாக தண்ணீரை இறைத்து மக்கள் படுகின்ற துன்பத்திலிருந்து காக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

மேற்கு மாம்பலத்தில் 5000 வீடுகள் தண்ணீர் சூழ்ந்து,  மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் உடனடியாக ராட்ச்ச  மோட்டார்களை வைத்து தண்ணீரை இறைத்து  அங்கிருக்கின்ற மக்களை காப்பாற்ற வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.