உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் சமாஜ்வாதி கட்சியினர் அனைவரும் சிகப்பு தொப்பி அணிகிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரது செயல்களும் கருப்பாக இருக்கிறது என்று கூறினார். இதற்கு தற்போது அகிலேஷ் யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, சிகப்பு என்பது கடவுள் துர்க்கையின் நிறம். அது உணர்வுகளின் நிறம்.
ஆனால் அவர்கள் நம்முடைய தொப்பியை கிண்டல் செய்கிறார்கள். எங்களுடைய தொப்பியை கிண்டல் செய்பவர்களுக்கே முதலில் தொப்பி தேவைப்படுகிறது. எங்களின் செயல்கள் அனைத்தும் நல்லவிதமாக இருக்கிறது. குறைந்தபட்சம் எங்களுடைய தலையில் முடியாவது இருக்கிறது. நாங்கள் தொப்பி அணிகிறோம். முடி இல்லாதவர்கள் தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது முதல்வர் யோகி ஆதித்யநாத் தலையில் முடி இல்லாததை அவர் குறிப்பிட்டு நீங்கள்தான் முதலில் தொப்பி அணிய வேண்டும் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளார். மேலும் இது மாநில பாஜகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.