சமூக ஊடகங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரது இதயத்தைக் கொள்ளை கொள்ள வைத்திருக்கும். அந்த வீடியோவில், சிறிது நொடிகளில் குழந்தைகளை மீட்ட அப்பாக்களின் ‘டாட் ரிப்ளெக்ஸ்’ செயல்கள் அடுக்கடுக்காக காட்சியளிக்கின்றன.

தொடக்கத்தில் சோபாவில் விளையாடும் குழந்தை கீழே விழும் தருணத்தில், அப்பா மறுநொடியே வந்து கையில் பிடித்து காப்பாற்றும் காட்சி — நம்பவே முடியாத ரியலிஸ்டிக் ஹீரோ சான்ஸ் மாதிரி தான்!

அதனை தொடர்ந்து, ஒரு பெரிய கண்ணாடி குழந்தையின் மீது விழும் தருணத்தில், அந்த அப்பா ஒரு கணத்தில் கையால் தடுத்து, தன் மகனின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

Reflexes
byu/itsjoey28 inGuysBeingDudes

இது போன்ற சூழ்நிலைகள் எப்போதும் சினிமாவில் மட்டுமே நடக்கும் என்று நினைப்போமே – இந்த வீடியோ அதை நேரலையில் உணர வைக்கிறது.

மற்றொரு காட்சியில், சாலையின் ஓரம் நின்றிருக்கும் குழந்தையை, அப்பா ஒருவர் திடீரென ஓடி வந்து பிடித்து பின்னால் இழுப்பார். அப்போது ஒரு வாகனம் பிசைந்து சென்று விடுகிறது. அந்த ஒரு நொடிக்குள்ள நடந்த செயல் – ஒரு உயிரைக் காப்பாற்றிய தருணம்!

முடிவில், பனிமூடிய இடங்களில், சறுக்கும் வாகனங்கள் அல்லது ஸ்னோபோர்டுகளால் தகர்க்கப்படவிருந்த குழந்தைகளை, அவர்கள் அப்பாக்கள் உடனடியாக அணைத்து பாதுகாக்கிறார்கள்.

இது ஒரு விஷயத்தை நிரூபிக்கிறது – ஹீரோக்கள் எல்லாரும் கேப் போட்டுத்தான் வரணும்னு இல்லை. ஒரு ஹூடியில், சாதாரண ஜாக்கெட்-ல, பாசமுள்ள மனசோட, குழந்தைக்கு மேல அன்போட இருக்குற அப்பாக்கள் தான் உண்மையான ஹீரோக்கள்!