அமெரிக்காவின் வர்ஜீனியாவைச் சேர்ந்த கேத்தரின் என்ற பெண், கடந்த 5 ஆண்டுகளாக ஒரு வினோதப் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.
பொதுவாக நாம் வாயால் உணவைச் சுவைத்துச் சாப்பிடுவோம், ஆனால் இவர் ஆம்லெட் முதல் காபி வரை அனைத்தையும் திரவமாக்கி (Liquid) மூக்கின் வழியாகவே குடிக்கிறார். கல்லூரி காலத்தில் நண்பர்களுடன் விளையாட்டாகச் செய்த ஒரு ‘சேலஞ்ச்’ தான் இவரை இப்படி மாற்றியுள்ளது.
View this post on Instagram
மூக்கின் வழியாக உணவைச் செலுத்தும்போது ஒருவிதமான போதை போன்ற உணர்வும், வித்தியாசமான சுவையும் கிடைப்பதாகக் கூறும் கேத்தரின், இப்போது அதற்குப் பழகிப்போய்விட்டார்.
இவரது இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், “உணவு சுவாசக் குழாய்க்குள் சென்றால் நிமோனியா வரலாம் அல்லது உயிருக்கே ஆபத்தாக முடியும்” என எச்சரித்துள்ளனர்.
இவரது காதலரே இதைப் பார்த்து முகம் சுளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஆனாலும், “இது எனக்குப் பிடித்திருக்கிறது, என்னால் நிறுத்த முடியவில்லை” என கேத்தரின் பிடிவாதமாக இருப்பது நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
