அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழில்நுட்ப வேலைகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் இந்தியர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார். வாஷிங்டன் AI மாநாட்டில் பேசிய அவர் கூறியதாவது, கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். நாம் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அமெரிக்கர்களுக்கு மட்டுமே வேலை வழங்க வேண்டும். அமெரிக்கர்கள் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று உணர்கிறார்கள். நாட்டில் கிடைக்கும் சுதந்திரத்தை பயன்படுத்தும் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்ற நாடுகளில் முதலீடு செய்கிறார்கள்.
எனது நிர்வாகத்தின் போது இந்த கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பேன் என்று தெரிவித்தார். பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை அமைத்து வருகிறார்கள். இந்தியர்களை வேலைகளில் அமர்ந்துகின்றனர் என்றும் விமர்சித்தார். மேலும் இங்குள்ள மக்களின் வாய்ப்புகளைப் பற்றி நீங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் அவர்களை புறக்கணிக்கிறீர்கள். பந்தயத்தில் வெற்றி பெற சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு புதிய தேசபக்தி தேவை. இங்குள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் நாட்டையும் முதன்மை படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
