
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சந்தியா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்தை பார்ப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். அப்போது அந்த தியேட்டரில் கூட்டம் அலைமோதியது. இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அதோடு அவரது மகன் ஸ்ரீதேஜ் என்பவர் படுகாயம் அடைந்து அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, அதன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தெலுங்கானாவில் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் காலை 11 மணிக்கு முன்பு, இரவு 11 மணிக்கு பிறகு தியேட்டரில் அனுமதிக்க கூடாது என்று அம்மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. மேலும் அதிகாலை மற்றும் நள்ளிரவில் படம் பார்ப்பது மனதளவில் குழந்தைகளை பாதிக்கும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.