
அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு பேரறிஞர் அண்ணாவை பத்தி நாம பேசணும்னா… மணி கணக்கில், நாள் கணக்குல பேசலாம். சுருக்கமாக சொல்லணும்னா… மத்திய அரசு, இந்தியாவில் இந்தி பேசுற மக்கள் இந்தியாவில் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் எல்லா மாநிலத்திலும் இந்தி வரணும்னு சொல்லி, மத்தியிலே ஆட்சியாளர்கள் இந்தியை திணிக்கும் போது,
அண்ணா சொன்னாரு…. காக்கா கூட தான் நிறைய இருக்கு. அதற்காக காக்காவை தேசிய பறவையாக முடியுமா? மயில் தேசிய பறவை. தேசிய மிருகம் புலி. ஆனால் எலி நிறைய இருக்கு. அதனால எலியை அகில இந்திய ரீதியில் தேசிய மிருகம்மாக கொண்டு வர முடியுமா ? என சொன்னார் அண்ணா. அவர் அறிவு ஜீவி. அதே போல பன்முகத்தன்மை. எழுத்து ஆற்றல், அதே போன்று பேச்சு ஆற்றல், ஆங்கிலத்தில் புலமை, தமிழில் புலமை.
அதே மாதிரி என்ன சப்ஜெக்ட் கேட்டாலும் குறிப்பு இல்லாமல் பேசக்கூடிய ஒரு மாபெரும் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். பேரறிஞர் அண்ணா அவர்கள் இன்றைக்கும் காலத்தால் அழிக்க முடியாது. எந்த கொம்பனும் அண்ணாவுடைய புகழுக்கு சிறுமை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால் ? அவன் தான் அழிந்து போவான். அண்ணாவுடைய புகழை எந்த கொம்பனும் அழிக்க முடியாது. அம்மாவுடைய புகழை அழிக்க முடியாது. பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புகழை அழிக்க முடியாது என தெரிவித்தார்.