
சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என 21 மூத்த வழக்கறிஞர்கள் ஜனாதிபதி மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு கடிதம் எழுதி அனுப்பினர். ஆனால் மதுரை கிளையின் மூத்த வழக்கறிஞர்கள் 56 பேர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்கலாம் என ஆதரவு தெரிவித்து கடிதம் எழுதினர். இதைத்தொடர்ந்து கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட நிலையில், விக்டோரியா கௌரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பணியமத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மத்திய அரசு வழக்கறிஞராக பணிபுரிந்த விக்டோரியா கௌரியை எதற்காக உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எதிர்ப்பு குறள் தெரிவித்து வருகிறார்கள் என்ற காரணத்தை தற்போது பார்க்கலாம். அதாவது மத்திய அரசின் வழக்கறிஞராக பணியாற்றிய விக்டோரியா கௌரி பாஜகவின் தீவிர ஆதரவாளராக மாறினார். இவர் நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதன் பிறகு பாஜக தேசிய மகளிர் அணி பொதுச் செயலாளராகவும் விக்டோரியா கௌரி பதவியாற்றியுள்ளார்.
பாஜகவுக்கு ஆதரவாக சில இடங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இப்படி படிப்படியாக வளர்ச்சி அடைந்த விக்டோரியா கௌரி மத்திய அரசு வழக்கறிஞராக உயர்வு பெற்றார். எனவே பாஜகவின் ஆதரவாளர் என்ற சித்தாந்தத்துடனே விக்டோரியா கௌரியை பார்க்கிறார்கள். மேலும் நீதித்துறையில் இந்துத்துவ சக்திகள் மற்றும் மதத்துறை சக்திகள் இடம்பெறுவதை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீதித்துறை என்பது சுதந்திரமாக செயல்படக்கூடியது. எனவே மதவாத சக்திகளை அனுமதிக்க கூடாது என மூத்த வழக்கறிஞர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.