தமிழக மக்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்தி விட்டார் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக தென்மாவட்டம் பெரும் மழை – வெள்ளம் தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  விளக்கம் கொடுத்துள்ளார். அதில்,  நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்பு செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை.

அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்று தமிழகத்தினுடைய வெள்ள பாதிப்பு பற்றி சொல்லியுள்ளார். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் தொனியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்திருப்பதாகவும் தமிழ்நாட்டு மக்களை மொத்தமாக அவமதித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அவர்களை 19ஆம் தேதி தமிழக முதலமைச்சர் நேரில் சென்று  20 நிமிடங்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர் இது தொடர்பான கோரிக்கை மனுவை கொண்டு வந்துள்ளீர்களா என்று கேட்டார்கள். ஆம் என்றதும், அதனை வாங்கி வைத்துக் கொண்டார்கள்.  உங்கள் கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றி தருகிறேன். இதைவிட எனக்கு வேறு என்ன பணி  என்று பிரதமர் சொன்னார்கள்.

தமிழ்நாட்டில் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி, 17 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது எனவும்,  50 ஆண்டுகள் கண்காதது, 100 ஆண்டு கணிக்காதது என்று சொல்லத்தக்க மழை அளவு எனவே அதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கிறது என தெரிவித்தார்.