தமிழக அரசியலில் இன்னும் ஓரிரு மாதங்களில் சில அதிரடி சம்பவங்கள் அரங்கேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது சமீபகாலமாகவே பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைவது, அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைவது என வேறு கட்சியிலிருந்து விலகி மற்றொரு கட்சியில் உறுப்பினர்கள் இணைவது நடைபெற்று வருகிறது. திமுகவில் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறப்பான முறையில் செய்து வருகிறார். இதன் காரணமாக தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் ஸ்டாலின் புது அசைன்மென்ட் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது கடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தாலும் அதிமுக கூட்டணி 75 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் அதிமுகவுக்கு மட்டும் 69 சட்டமன்ற உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி எல்லா இடங்களிலும் தைரியமாக திமுகவை விமர்சித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அதிமுகவின் முக்கிய புள்ளிகளை குறிவைத்து திமுகவில் இணைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியும் லிஸ்ட் போட்டு வருகிறாராம். மேலும் விரைவில் அதிமுக மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள்  முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கலாம் என்று கூறப்படுகிறது.