
தாய்லாந்தில் காந்தீ என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். பிரபல இவர் புத்தாண்டை தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அப்போது அவர்கள் சவால் ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் 20 நிமிடத்தில் 2 பாட்டில் மது அருந்தினால் ரூபாய் 75 ஆயிரம் பணம் கொடுப்பதாக கூறியுள்ளனர். இந்த சவாலை காந்தீ ஏற்று மது அருந்தியுள்ளார். அவர்கள் காந்திக்கு 2, 350 மில்லி விஸ்கிகளை வாங்கி கொடுத்துள்ளனர். பின்னர் சவாலின் பெயரில் அதை முழுவதுமாக 20 நிமிடத்தில் குடித்துள்ளார்.
இதனையடுத்து விஸ்கியை குடித்த சில நிமிடங்களிலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை தொடர்ந்து நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அளிக்கப்பட்ட சிகிச்சையும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது