நேபாளத்தில் எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர்..

நேபாளத்தின்  காத்மாண்டுவில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை ரசிப்பதற்காக 5 பேர்  ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். இதையடுத்து காலை 10 : 12 மணிக்கு ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கிய விபத்தில் 5 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.லிக்கு பிகே கிராம எல்லையில் உள்ள மலை உச்சியில் உரசியதில் ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது,மலை உச்சியில் உள்ள ஒரு மரத்தில் மோதி விபத்து நேர்ந்திருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் அந்த பகுதி வழியாக மலை உச்சி அருகே செல்லும்போது மரத்தின் மீது உரசி அல்லது மோதி இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி கீழே விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது.. பயணம் செய்த அனைத்து ஹெலிகாப்டர் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.. 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது..

லிக்கு பிகே கிராமம் அருகே உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. தற்போது அங்கே போலீசார் மற்றும் பிற அதிகாரிகள் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.. முதல் கட்டமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தான் ஹெலிகாப்டர் கீழே விழுந்ததை கண்டுள்ளனர்.. அவர்கள் தான் அங்கே சென்று மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மேலும் ஒரு நபர் என்ன ஆனார் என்பது குறித்து தற்போது அங்கே தேடும் பணி நடைபெற்று வருகிறது ..ஐந்து பயனிலும் மெக்சிகன் நாட்டை சேர்ந்தவர்கள்..  விமானி என்ன ஆனார் என தெரியவில்லை. அவரது உடல் கிடைக்கவில்லை. அவர் உயிரிழந்ததாக தான் தெரிகிறது..