ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயமென்று பவன் கல்யாண் பேசியதற்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஆந்திரா மாநிலம் வேறூரில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண்,  யாத்திரை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,  ஆந்திராவில் கடந்த நான்காண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர் என்றும்,  அவர்களில் 12,000 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

மீதமுள்ள 18,000 பெண்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்று கூறியபவன் கல்யாண்,  இது குறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஏன் ஆய்வு கூட்டம் நடத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

பெண்களை காதல் வலையில் விழ வைத்து கடத்தி செல்வது போன்ற சம்பவங்கள் நடக்கிறது என்றும் அவர்குற்றம் சாட்டினார். பவன் கல்யாண் பேச்சு ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த நிலையில்,  பவன்கல்யாண் பேச்சுக்கு விளக்கம் கேட்டு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  ஆதாரங்களை வழங்க வேண்டும்,  இல்லை என்றால் பெண்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது