பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ரன்பீர் கபூர். இவர் சமீபத்திய பேட்டியில் நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, நடிகர் அஜித் ஒரு எளிமையான மனிதர். அவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் மேடைகளிலும் பார்க்க முடியாது. திரைப்படங்களில் மட்டும் தான் நடிகர் அஜித்தை பார்க்க முடியும். அவரின் புகைப்படங்களை கூட அதிக அளவில் பார்க்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு எளிமையான மனிதரை என் வாழ்வில் நான் பார்த்ததே கிடையாது.
சோசியல் மீடியா இப்படி பரந்து விரிந்து இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தை பார்க்கும்போது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. நடிகர் அஜித் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினியா, விஜயா என்று ரசிகர்கள் மோதிக் கொள்ளும் நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் அஜித்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னது தல ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.